ரவூப், செப்டம்பர்.14-
பகாங், உலு காலியில் உள்ள கல் சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, 30 வயது இளைஞரான முகமட் ஃபாஸ்ருல் இல்லாஹி அப்துல் ரஹ்மான் பாறைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை ஏற்பட்ட மேலும் ஒரு நிலச்சரிவு, மீட்புக் குழுவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என ரவூப் தீயணைப்பு – மீட்புப் படையின் தலைவர் ஜலாய்லுடின் அப்துல் முபின் தெரிவித்தார்.
இந்த திடீர் நிலச்சரிவு காரணமாக, மீட்புப் பணி சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இந்தத் துயரமானச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.








