May 21, 2026
Thisaigal NewsYouTube
முதியவர் தாக்கப்பட்ட சம்பவம்,, இருவர் கைது
தற்போதைய செய்திகள்

முதியவர் தாக்கப்பட்ட சம்பவம்,, இருவர் கைது

Share:

காஜாங், Semenyih 2, Taman Pelangi – சாலை சந்திப்பில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்திற்கு காரணமானவர் என்று நம்பப்படும் முதிவர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 மற்றும் 43 வயதுடைய அந்த இரு நபர்களும் இன்று காலை 3.30 மணியளவில் காஜாங் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Zaid Hassan தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை மதியம் 12.35 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள 63 வயதுடைய நபர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

முதியவர் செலுத்திய வாகனம், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த மாது ஒருவர் செலுத்திய வேனில் மோதியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்நது அந்த முதியவரை, விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஒருவரும், அடையாளம் தெரியாத மேலும் இரு நபர்களும் கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த முதியவர் வயிற்றிலும், உடலிலும், நெற்றிலும் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.

Related News