வீட்டில் சத்தம் போட்டு, ரகளை செய்கிறார் என்று கூறி, ஆடவர் ஒருவர், கைகால்கள் கட்டப்பட்டு, வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், போதையில் திளைத்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த ஆடவர், கயிற்றை அவிழ்த்துக்கொண்டு, வீட்டுக்கு தீயிட்டப் பின்னர் அங்கிருந்து தப்பித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று Bandar Kinrara, Taman Kinrara, Kinrara Court என்ற அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP A.A. அன்பழகன் தெரிவித்தார்.
தகவல் கிடைத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ஓர் இந்தோனேசிய நபரான 34 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட அந்த ஆடவர், ஒரு பெண் மற்றும் இரு நண்பர்களுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார் என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அன்பழகன் தெரிவித்தார்.








