இன்று செவ்வாய்க்கிழமை, இரவு, புக்கிட் ஜாலில், அக்சியத்தா அரேனா அரங்கில் நடைபெறவிருககும் பாலஸ்தீன மக்களுக்கான பேரணியில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் கொடூர தாக்குதலை கண்டிக்கும் அதேவேளையில் பாலஸ்தீன மக்களுக்கு தார்மீக ஆதரவை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கான இந்த பேரணி, மக்ரிப் தொழுகையுடன் தொடங்கும் என்று மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கமான அபிம் தலைவர் முகமட் ஃபைசால் அப்துல் அசீஸ் தெரிவித்தார்.
பாலஸ்தீனர்களின் போராட்டத்தில் தங்களின் கடப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் மலேசியர்களை பிரதிநிதிக்கும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களின் உரைகளும் இந்தப் பேரணியில் இடம் பெறவிருக்கின்றன. பேரணியின் சிறப்பு அம்சமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு பேருரை நிகழ்த்துவார் என்று பெர்னாமா தகவல்கள் கூறுகின்றன.








