Aug 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரு வாகனங்கள் மோதிக் கொண்டதில் மூவர் மரணம்

Share:

சிலாங்கூர், செரென்டா அருகில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் மூவர் உயிரிழந்தனர். ஒருவர் கடுமையான காயங்களுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் ஜாலான் குவால குபு பரு – ரவாங் – புக்கிட் பெருந்தோங் சாலையில் செரென்டா கோல்ஃப் ரெசோர்ட் அருகில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து, ரவாங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் உதவியுடன் கோலகுபுபாரு நிலையத்தை சேர்ந்த 11 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவ்விலாகாவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்த்தார் தெரிவித்தார்.

தொயோத்தா அவான்ஸா வாகனமும், பெரோடுவா அக்சியா காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர். தொயோத்தா அவான்ஸா வாகனத்தில் பயணம் செய்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அவருடன் பயணித்த பெண் கடும் காயங்களுக்கு ஆளானார்.

பெரோடுவா அக்சியா காரில் பயணித்தவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் மரணம் அடைந்ததாக அஹ்மாட் முக்தார் தெரிவித்தார்.

Related News