Oct 18, 2026
Thisaigal NewsYouTube

விஜயலெட்சுமியை கண்டு பிடிப்பதில் / பாதாள சாக்கடை தடுப்பை நோக்கி முன்னேற்றுவதில் தோல்வி / அதிகாலை மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முயற்சியும் பலன் அளிக்கவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விஜயலெட்சுமியை கண்டு பிடிப்பதில் / பாதாள சாக்கடை தடுப்பை நோக்கி முன்னேற்றுவதில் தோல்வி / அதிகாலை மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முயற்சியும் பலன் அளிக்கவில்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30-

கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் ஆளை விழுங்கிய பாதாள சாக்காடை கால்வாயில் இந்தியப்பிரஜை விஜயலெட்சுமியை தேடும் பணி, இன்று வெள்ளிக்கிழமை எட்டாவது நாளாக தொடங்கிய நிலையில், கழிவு நீர் குழாயில் 15 மீட்டர் நீளமுள்ள தடுப்புப்பகுதிக்கு ஊடுருவதில் முக்குளிப்பவர்கள் தோல்விக் கண்டனர்.

தீயணைப்பு, மீட்ப்படையின் முக்குளிப்பவர்கள், அடையாளம் காணப்பட்ட அந்த தடுப்புப்பகுதியை இலக்காக கெண்டு, இன்று அதிகாலை 3 மணிக்கு பாதாளச் சாக்டையின் கால்வாய் பகுதிக்குள் இறங்கினர்.

விஜயலெட்சுமி விழுந்த இடத்திலிருந்து 44 மீட்டர் தூரத்தில் உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் குழாயில் ஒரு நீளமான தடுப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. ஏதோ ஒரு பொருள் அடைத்துக்கொண்டு இருப்பது மோப்ப நாய்கள் மூலம் கண்டறிப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியை இலக்காக கொண்டு அதிகாலையில் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

சுமார் 30 நிமிடம் பாதாளச் சாக்கடைக்குள் தேடும் பணியில் ஈடுபட்ட முக்குளிப்பவர்களால் அந்த தடுப்பை நோக்கி முன்னேறிச் செல்ல முடியவில்லை. மணலும், நீரோட்டமும் அதிகமாக இருந்ததால் முக்குளிப்பவர்கள் வந்த வழியிலேயே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்றிரவு 11.20 மணியவில் ராட்ஷச பாராந்தூக்கி இயந்திரம் ஒன்று, சம்பந்தப்பட்ட பகுதியை வந்தடைந்தது. ஆழமான குழியில் 10 ஆயிரம் லிட்டர் முதல் 20 ஆயிரம் லிட்டர் வரை கழிவு நீரை வெளியேற்றக்கூடிய பம்செட் இயந்திரம் ஒன்று அந்த பாதாளக்குழிக்குள் இறக்கப்பட்டது.

அதன் பின்னரே அதிகாலை 3 மணியளவில் முக்குளிப்பவர்கள் இறக்கப்பட்டனர். இரண்டாவது கட்ட முயற்சி அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் அது தொடர்பான விவரங்களை தீயணைப்பு, மீட்புப்படையினர் இன்னும் வெளியிட்டவில்லை.


இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →