இஸ்கண்டார் புத்ரி, அக்டோபர்.27-
மண்வெட்டியை ஆயுதமாகப் பயன்படுத்தி அந்நிய நாட்டவர் ஒருவரிடம் கொள்ளையிட்டதாக நம்பப்படும் நான்கு நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளதாக ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை இஸ்கண்டார் புத்ரி- தாமான் பூலாய் முத்தியாராவில் வங்காளதேசத் தொழிலாளி ஒருவர் மண்வெட்டியால் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற புகாரைத் தொடர்ந்து சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த தொழிலாளி கட்டுமானத் தளத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








