Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கொல்கலன் லோரியில் மோதி லோரி ஓட்டுநர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொல்கலன் லோரியில் மோதி லோரி ஓட்டுநர் பலி

பத்து பகாட், நவ. 13-


வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 79.9 ஆவது கிலோமீட்டரில் பத்து பகாட்டிற்கு அருகில் இன்று அதிகாலை 1.59 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

அவர் செலுத்திய லோரி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து 40 டன் எடைக்கொண்ட ஹினோ ரக டிரெய்லர் லோரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

28 வயதுடைய அந்த லோரி ஓடடுநரின் உடலை இடிபாடுகளிலிருந்து மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் உதவி நாடப்பட்டது.

ரெங்கம் மற்றும் ஆயர் ஹீத்தாம் ஆகிய நிலையங்களிலிருந்து விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி, ஓட்டுநரின் உடலை, இடிபாடுகளிலிருந்து மீட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →