ஏழு ஆண்டுகுளுக்கு முன்பு, தனது வளர்ப்பு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை வெட்டிக்கொன்ற நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற தலைமை நீதிபதி தேங்கு மைமுன் துவான் மாட், சம்பந்தப்பட்ட நபர் செய்து கொண்ட மேல்முறையீட்டில் தகுதிபாடுயில்லை என்று கூறி அவரின் விண்ணப்பத்தை நிராகரித்தார்.
லுக்மான் ஹாதி முஸ்தபா என்ற அந்ந நபர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட 25 ஆம் தேதி காலை 5.50 மணியளவில் மலாக்கா , பெர்டன் மாலிம் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 61 வயது மரியா பஹாரிம், அவரின் கணவர் 70 வயது ஹசன் ஏ வஹாப் மற்றும் அவர்களின் 22 வயது மகன் முஹம்மது தௌஃபீக் ஹசன் ஆகியோரை வெட்டிக்கொன்ற குற்றத்திற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு மலாக்கா உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்தது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


