Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஐந்தாம் படிவ மாணவன் விபத்தில் உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஐந்தாம் படிவ மாணவன் விபத்தில் உயிரிழந்தார்

மலாக்கா,அக்டோபர் 02-

பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவன் ஒருவன், வாகனத்தில் மோதி உயிரிந்தான். இச்சம்பவம் இன்று காலையில் மலாக்கா, பத்து பெரெண்டாம், ஜாலான் டத்தோ மாட் ஜின் சாலையில் நிகழ்ந்தது.

பத்து பெரெண்டாம், துன் முதாஹிர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த முஹம்மது ருஸ்யாயிடி முகமது ரஸாலி என்ற 17 வயது மாணவரே இச்சம்பவத்தில் மாண்டதாக மலாகா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மாணவன், தனது மோட்டார் சைக்கிளின் முன்னே சென்று கொண்டிருந்த Nissan X Trai வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது அந்த வாகனத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →