Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கேபிள் திருடும் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கேபிள் திருடும் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேர் கைது

Share:

அம்பாங் ஜெயா, ஜுன் 30 -

சிலாங்கூர், உலு கெலாங் , ஜாலான் ஹில்வியூ என்ற இடத்தில் கேபிள் திருடும் நடவடிக்கையில் தீவிர ஈடுபாடு செலுத்தி வந்ததாக சந்தேகிக்கும் எட்டு உள்ளூர் ஆண்கள் உட்பட மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 5.23 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் சந்தேகத்திற்கிடமான காரில் இருவர் சென்றதை கண்டறிந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் முகமட் அசம் இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட காரை நிறுத்துவதற்கு போலீஸ் அதிகாரிகள் கட்டளையிட்டதை தொடர்ந்து, அக்காரின் ஓட்டுநர் சட்டென்று சுங்கை பெசி -உலு கெலாங் நெடுஞ்சாலையின் உள்ளே நுழைந்ததாகவும் மற்றொருவர் காரிலிருந்து கீழே குதிக்க முற்பட்ட வேளை போலீசாரால் கைது செய்யப்பட்டதாக முகமட் அசம் கூறினார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக 17 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய 9 பேரும் கைது செய்யப்பட்டதாக முகமட் அசம் அறிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்களில் இருவர் நாளை வரை தடுப்பு காவலிலும் மேலும் ஒன்பது பேர் வரும் ஜுலை 3 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்