Oct 14, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு - 170 மில்லியன் ரிங்கிட் பணம், 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஷா ஆலாம், மார்ச்.02-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட கையூட்டு, பணமோசடி விசாரணைகள் தொடர்பான பல இடங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்திய சோதனைகளின் விளைவாக, சுமார் 170 மில்லியன் ரிங்கிட் பணமும் கிட்டத்தட்ட 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய நான்கு மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குடியிருப்புகளாகவும் 'பாதுகாப்பான வீடுகளாகவும்’ செயல்படுவதாக நம்பப்படும் மூன்று பிற வளாகங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளில், Baht, Riyal, Pound Sterling, Won, Euro, Swiss Franc, Yuan போன்ற பல்வேறு பன்னாட்டு நாணயங்களில் மாற்றுப் பணம் கண்டெடுக்கப்பட்டது.

இஸ்மாயில் சப்ரி நாட்டின் பிரதமராக இருந்தபோது விளம்பர நோக்கங்களுக்காக செய்யப்பட்ட செலவு தொடர்பாகவும் நிதி கையகப்படுத்துவது தொடர்பாகவும் விசாரணை கவனம் செலுத்துகிறது. SPRM சட்டம் 2009 , பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதி தடுப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானச் சட்டம் 2001 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறுகிறது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்மாயில் சப்ரி 2024 டிசம்பர் 11 அன்று SPRM சட்டம் 2009 இன் பிரிவு 36(1) இன் கீழ் சொத்து அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அதனைத் தொடர்ந்து அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த பிப்ரவரி 10 அன்று செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் கடந்த பிப்ரவரி 19 அன்று SPRM அலுவலகத்தில் சாட்சியம் அளித்தார். மேலும் விசாரணைக்கு உதவ மீண்டும் அழைக்கப்படலாம். இது தொடர்பாக, சுமார் 10 சாட்சிகள் அடையாளம் காணப்பட்டு விரைவில் அழைக்கப்படுவார்கள்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேங்க் நெகாரா வங்கி, ஆளுநர், மூத்த அதிகாரிகள் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்