Jul 31, 2026
Thisaigal NewsYouTube
குழாய் உடைந்ததால் பினாங்கு மக்கள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

குழாய் உடைந்ததால் பினாங்கு மக்கள் பாதிப்பு

Share:

பினாங்கு, பிறாய் ஆற்றின் அடியில் ஆயிரத்து 350 மில்லி மீட்டர் கொண்ட தண்ணீர் குழாய் உடைந்ததில் அம்மாநிலத்தின் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழாய் உடைந்த விவகாரத்தை பினாங்கு தண்ணீர் வாரியம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், இதற்கானக் காரணத்தை அவ்வாரியம் ஆராய்ந்து வருகிறது.
இதனால், வட செபெராங் பிறாயில் உள்ள அம்பாங் ஜாஜார், பட்டர்வெர்த், சுங்ஙாய் டுவா பகுதிகளும், பாராட் டாயா, தீமூர் லாவுட் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான நிலையில் தண்ணீர் பயனர்களின் ஒத்துழைப்பும் சிக்கனமான பயன்பாடும் மிக மிக அவசியம். அவ்வப்போது, நீர் விநியோகிப்பு குறித்த தகவல்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என வாரியம் கூறியது.

Related News