புத்ராஜெயாவில் உள்ள தமது அமைச்சில், இன்று காலையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், தமது சிறப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டதை மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் உறுதிப்படுத்தினார்.
தமது அலுவலகத்தில் நடந்த இந்தக் கைது நடவடிக்கை குறித்து, தமக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கைது நடவடிக்கை, இன்னுமும் எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் இருப்பதால், தற்போதைக்கு அது குறித்து கருத்துரைக்க இயலாது என்று சிவக்குமார் விளக்கினார்.
அதே வேளையில், அவசியம் ஏற்படும் பட்சத்தில், எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஒத்துழைக்க தாம் தயாராக இருப்பதாக சிவக்குமார் உறுதிக் கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமாரின் சிறப்பு அதிகாரி, பேராக் மாநில ஜ.செ.கா வின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் என்று கூறப்படுகிறது.
மனிதவள அமைச்சின் கீழ் அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்புத் தொடர்பில், தமக்கு வேண்டிய நிறுவனம் ஒன்றை நியமித்துக்கொண்டதாக கூறி அந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். தகவல்கள் கூறுகின்றன.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


