Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவில் புத்தகப் பற்றுச் சீட்டு திட்டத்தின் வெற்றி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவில் புத்தகப் பற்றுச் சீட்டு திட்டத்தின் வெற்றி

நவ. 24-

‘Digital Educational Learning Initiative Malaysia’ (DELIMa) இணையத் தளம் மூலம் வழங்கப்பட்ட புத்தகப் பற்றுச் சீட்டை நாட்டின் 75% க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு 287 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என துணைக் கல்வி அமைச்சர் Wong Kah Woh தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் தங்கள் புத்தகப் பற்றுச் சீட்டுகளை இணையவழியாக மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம், அப்பற்றுச்சீட்டுகளைப் பணமாக மாற்றும் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

DELIMaவின் கீழ், மாணவர்கள் தங்கள் பற்றுச்சீட்டுகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக, மாநில கல்வித் துறைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என Wong Kah Who குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தால், கிராமப்புற மாணவர்கள், டிஜிட்டல் கல்வி குறித்து அதிக தெளிவு பெற முடியும். மலேசிய அரசாங்கம், கல்வித்துறையில் டிஜிட்டல் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம், அம்முயற்சிகளில் ஒன்றாகும் என்றார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →