Sep 15, 2026
Thisaigal NewsYouTube
ரிங்கிட் 5 லட்சத்து 3 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த உத்தரவு
தற்போதைய செய்திகள்

ரிங்கிட் 5 லட்சத்து 3 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த உத்தரவு

Share:

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஓர் இந்தியப் பிரஜையான எஸ். நீலகண்டன், தொழிலதிபர் கே. சிவநாதனிடம் பெற்ற ரிங்கிட் 5 லட்சத்து 3 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு, நீலகண்டனின் தனிப்பட்ட கோரிக்கையின் பேரில் ரிங்கிட் 10 லட்சம் நட்புக் கடனாக வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பணம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தாலும், உண்மையான கடனாளி நீலகண்டன்தான் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், அவர் கடனில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தியதுடன், மீதித் தொகையை செலுத்துவது தொடர்பாக சிவநாதனுடன் தொடர்ந்து புலனம் மூலம் தொடர்பில் இருந்ததையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.

நீலகண்டனின் நிறுவன அதிகாரியாக மட்டுமே செயல்பட்டதாக முன்வைத்த வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நீலகண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Related News