Jul 1, 2026
Thisaigal NewsYouTube
 நெகிரி செம்பிலான்  மாநிலத்தில் அரசியல் மாற்றமா? பாரிசான் நேஷனலுடன்  இணைய பெரிக்காத்தான் தயார்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசியல் மாற்றமா? பாரிசான் நேஷனலுடன் இணைய பெரிக்காத்தான் தயார்

Share:

நெகிரி செம்பிலான் மாநில அரசின் நிலைத்தன்மையைக் காக்க, பாரிசான் நேசனல் உடன் இணைந்து பணியாற்றத் தயார் என பெரிக்காத்தான் நேசனல் அறிவித்துள்ளது.

மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என 14 பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் முகமது ஹனிபா அபு பக்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநில நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இழுபறியால் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், மக்களின் நலன் கருதி பாரிசான் நேஷனல் மற்றும் அம்னோவுடன் இணைந்து செயல்படத் தங்கள் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பான கடிதம் மாநில அம்னோ செயலாளரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நான்கு மாவட்ட பாரம்பரியத் தலைவர்களான உண்டாங்-உண்டாங் ஆகியோர் மாநில ஆட்சியாளரான சமஸ்தானபதி துங்கு முக்ரிஸை பதவி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளதோடு, மந்திரி புசார் அமினுடின் ஹருன் மீதான ஆதரவையும் மீட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இந்த அதிகாரப் போட்டியால் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை