Oct 13, 2026
Thisaigal NewsYouTube

ஜம்ரி வினோத்திற்கு எதிராக 894 போலீஸ் புகார்கள் - ஐஜிபி தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜம்ரி வினோத்திற்கு எதிராக 894 போலீஸ் புகார்கள் - ஐஜிபி தகவல்

கோலாலம்பூர், மார்ச்.12-

தைப்பூசக் காவடியாட்டதை கொச்சைப்படுத்தி, இந்துக்களை அவமதித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்துவிற்கு எதிராக நாடு தழுவிய நிலையில் 894 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் அறிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் வரையில் ஜம்ரி வினோத்துக்கு எதிராக 894 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார். இதன் தொடர்பில் ஜம்ரி வினோத், விசாரணை செய்யப்பட்டு, வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து விட்டனர்.

மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை, சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.

போலீசார் சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கை இன்னமும் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் பரிசீலனையில் இருந்து வருவதாக ஐஜிபி மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்