Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்காக கையூட்டு பெற்ற முன்னாள் உதவி மேலாளர்
தற்போதைய செய்திகள்

இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்காக கையூட்டு பெற்ற முன்னாள் உதவி மேலாளர்

Share:

கோலாலம்பூர், ஜூன் 25-

கடந்த ஆண்டு, Konsert Double Trouble 2 என்ற இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது தொடர்பாக Playmad Sdn Bhd நிறுவனத்தின் உரிமையாளரிடம் 30 ஆயிரம் வெள்ளி கையூட்டு பெற்றதாக அரசு நிறுவனத்தின் முன்னாள் உதவி மேலாளர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

37 வயது நூர்பாதிலா முகமது இத்ரிஸ் என்ற அந்த முன்னாள் உதவி மேலாளர், நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 24(1) பிரிவின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பர் 11 ஆம் தேதியில் மத்திய பிரதேசம் மற்றும் கோலாலம்பூர், தாமான் செத்தாப்பாக் இண்டா ஜெயா -வில் உள்ள ஒரு வங்கியில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்