Jun 28, 2026
Thisaigal NewsYouTube
மெர்டேக்கா 118 கோபுரம்: மலேசியாவின் முதல் ‘MD Nexus’ அங்கீகாரம் - அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பெருமிதம்
தற்போதைய செய்திகள்

மெர்டேக்கா 118 கோபுரம்: மலேசியாவின் முதல் ‘MD Nexus’ அங்கீகாரம் - அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பெருமிதம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.04-

மலேசியாவின் இலக்கவியல் எதிர்காலத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, கோலாலம்பூரில் உள்ள மெர்டேக்கா 118 கோபுரம் நாட்டின் முதல் 'MD Nexus' ஆக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

இலக்கவியல் அமைச்சு மற்றும் மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகம் இணைந்து செயல்படுத்தும் மலேசியா டிஜிட்டல் இட அங்கீகார முன்முயற்சியின் கீழ் இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இக்கோபுரம் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சிறந்த இலக்கவியல் தயார்நிலையைக் கொண்டுள்ளது. இது உயர்மதிப்புள்ள இலக்கவியல் வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் திறன் கொண்டது என்பதை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துகிறது.

இந்த மைல்கல் குறித்து மேலும் கருத்துரைத்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, "மலேசியாவை ஒரு முன்னணி பிராந்திய இலக்கவியல் மையமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் லட்சியத்தை இது வலுப்படுத்துகிறது என்றார்.

மெர்டேக்கா 118 கோபுரம் வெறும் கட்டிடம் மட்டுமல்லாமல், கண்டுபிடிப்புகள், ஒத்துழைப்பு மற்றும் நீண்டகால இலக்கவியல் வளர்ச்சிக்கான ஓர் ஊக்கியாகத் திகழும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, "மலேசியா ஒரு பிராந்திய இலக்கவியல் பொருளாதார நுழைவாயில்" எனும் ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் இலக்கவியல் முதலீட்டாளர்களுக்கு மலேசியா மிகவும் உகந்த இடமாக இருப்பதை இது சுட்டிக் காட்டுகிறது.

Related News