Sep 28, 2026
Thisaigal NewsYouTube
கோவில் விவகாரத்திற்காக புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றமா? – மருத்துவமனை வாரியம்  மறுப்பு
தற்போதைய செய்திகள்

கோவில் விவகாரத்திற்காக புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றமா? – மருத்துவமனை வாரியம் மறுப்பு

Share:

அருகிலுள்ள கோவிலுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படவிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலை அந்த மருத்துவமனையின் பார்வையாளர்கள் வாரியம் வன்மையாக மறுத்துள்ளது.

"கோவிலுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படும்" என்று முகநூல் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் பதிவில் புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சருமான ஸ்டீவன் சிம் அவர்களின் பெயர் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவமனை வாரியம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இன மற்றும் மத ரீதியான பதற்றத்தைத் தூண்டும் வகையிலும் இந்தத் தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளதாகக் கூறியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கு உரிமையாளர் மீது நிந்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனைக்கு வருகை தந்த அமைச்சர் ஸ்டீவன் சிம், கோவில் தொடர்பான எந்தவொரு விவகாரத்தையும் எழுப்பவில்லை என்று வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

"மருத்துவமனையை இடமாற்றம் செய்யும் எண்ணம் ஏதுமில்லை. மாறாக, அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய வளாகத்திலேயே கூடுதல் கட்டிடங்களை கட்டவே திட்டமிடப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கும்," என்று வாரியம் விளக்கமளித்துள்ளது.

இந்த விரிவாக்கப் பணிகளுக்காக பினாங்கு மாநில அரசு ஏற்கனவே 3.2 ஹெக்டர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. தற்போது இந்தத் திட்டம் சுகாதார அமைச்சின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

புக்கிட் மெர்தாஜமில், ஜாலான் கூலிமில் மருத்துவமனைக்கு வெளியே அமைந்துள்ள ஸ்ரீ தேவ மருதுவர் ஜடா முனீஸ்வரர் ஆலயம் தொடர்பாக அண்மையில் நடத்தத் திட்டமிடப்பட்ட ஒரு கூட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத மற்றும் இன ரீதியான பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு, அந்தக் கூட்டத்தை ரத்து செய்யுமாறு ஸ்டீவன் சிம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்