Oct 17, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ் படை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ் படை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்

கோலாலம்பூர், நவ. 5-


தனது உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களை கையாளுவதில் அரச மலேசியப் போலீஸ் படை மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது அவசியமாகும் என்று அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களை கையாளுவதற்கு இதர அரசாங்க ஏஜென்சிகளின் நடவடிக்கைகளுக்காக காத்திருக்கக்கூடாது என்று அயோப் கான் வலியுறுத்தினார்.

குற்றம் இழைக்கும் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுப்பது மூலமே அரச மலேசியப் போலீஸ் படையின் மாண்பை உயர்த்திக்பிடிக்க முடியும் என்று உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →