Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஜுலை 12 ஆம் தேதி பொது விடுமுறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜுலை 12 ஆம் தேதி பொது விடுமுறை

ஜார்ஜ்டவுன், ஜூலை.01-

பினாங்கு மாநில ஆளுநர் ரம்லி ங்கா தாலிப்பின் 84 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஜுலை 12 ஆம் தேதி பினாங்கு மாநிலத்திற்குப் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனினும் மாநில அரசு சார்பில் உயரிய விருதுகள் மற்றும் பட்டங்கள் வழங்கப்படும் விழாவிற்கானத் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து அவரின் பதவியேற்பு விழா மற்றும் இதர நிகழ்வுகள் வரும் ஜுலை 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பினாங்கு சட்டமன்ற சபா நாயகர் லாவ் சூ கியாங் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் பதவியேற்பு விழா சற்று தாமதமானாலும் பினாங்கில் ஜுலை 12 ஆம் தேதி பொது விடுமுறையாகும் என்று லாவ் சூ கியாங் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →