Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கொள்கலன் லோரி பள்ளத்தாக்கில் விழுந்தது
தற்போதைய செய்திகள்

கொள்கலன் லோரி பள்ளத்தாக்கில் விழுந்தது

Share:

கொள்கலன் லோரி ஒன்று வேககட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று மாலை 5.24 மணியளவில் ரவாங், லாதார் நெடுங்சாலையின் 28.7 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

சுமார் 20 அடி பள்ளத்தாக்கில் விழுந்த அந்த 3 டன் லோரியிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர், தூக்கி எறியப்பட்டு கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

Related News