ஜோகூர் பாரு, செப்டம்பர்.08-
ஜோகூரில் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதாக நம்பப்படும் தம்பதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ஏறக்குறைய 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களையும் ஜோகூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து ஜோகூர் மாநில காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் இன்று வெளியிட்டுள்ள தகவலில், தேநீர் பைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 80 கிலோ எடையுள்ள சியாபு என சந்தேகிக்கப்படும், 76 பொட்டலங்களைத் தாங்கள் பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இவர்களுடன் தொடர்புடைய மற்ற கடத்தல் கும்பல்களும் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








