மலாக்கா, ஆகஸ்ட்.12-
லைசென்ஸின்றி டொயோட்டா அல்பார்ட் வாகனத்தைச் செலுத்திய இரு மியன்மார் பிரஜைகளைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே கைது செய்யது.
ஒரு பெண்ணுடன் 6 மியன்மார் பிரஜைகள் ஜோகூர் பாருவிற்கு டொயோட்டா அல்பார்ட் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் மலாக்காவில் பிடிபட்டனர். அந்தக் காரில் ஐந்து சட்டவிரோதப் பிரஜைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆடம்பரக் காரைப் பயன்படுத்தினால், அமலாக்க அதிகாரிகளின் சந்தேகத்திற்கு இடம் இருக்காது என்ற நம்பிக்கையில் தங்கள் பயணத்திற்கு அந்த அந்நிய ஆடவர்கள் டொயோட்டா அல்பார்ட் வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஜேபிஜே மலாக்கா மாநில இயக்குநர் சித்தி ஸரினா முகமட் யுசோஃப் தெரிவித்தார்.








