Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தீயில் அழிந்த பஞ்சு தொழிச்சாலையின் 74 ஊழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

தீயில் அழிந்த பஞ்சு தொழிச்சாலையின் 74 ஊழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

Share:

ரவாங், ஜூலை.24-

கடந்த மாதம் பிற்பகுதியில் ரவாங், சுங்கை பாக்காவ், பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் பகுதியில் பஞ்சு தயாரிப்புத் தொழிற்சாலை, தீயில் அழிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 74 தொழிலாளர்களுக்கு மனித அமைச்சர் ஸ்டீவன் சிம் ஏற்பாட்டில் விளக்கமளிப்பு நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ரவாங், பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மனித வள அமைச்சின் சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவிலிருந்து வந்த பத்து அதிகாரிகள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து விளக்கம் அளித்ததாக மனித வள அமைச்சின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி டிக்கா லூர்ட்ஸ் தெரிவித்தார்.

மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் முன்னெடுப்பில் சிலாங்கூர் மாநில மனித வள ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு மற்றும் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் ஆகியோரின் மிகுந்த ஒத்துழைப்புடன் இந்த விளக்கமளிப்புக் கூட்டம் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வரை சொக்சோவின் காப்புறுதி திட்டத்தின் மூலம் அவர்களுக்கு மாதாந்திர சம்பளத்தில் 70 விழுக்காடு நிவாரணத் தொகை வழங்குவது, மற்றும் மைஃபூயூச்சர்ஜோப்ஸ் மூலம் அவர்களுக்கு வேலை தேடித் தருவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அத்துடன் இந்தச் சந்திப்பு நிகழ்வில் முகப்பிடங்கள் திறக்கப்பட்டு ஒவ்வொருவரையும் சொக்சோ அதிகாரிகள் நேர்காணல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 74 தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் சொக்சோவின் அனுகூலங்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்தார்.

இந்த 74 தொழிலாளர்களில் 35 வயதுக்கு கீழ்பட்ட 15 பேர் மனித வள அமைச்சின் இந்தியர்களுக்கான திறன் முன்னெப்புத் திட்டமான மிசி மூலம் தொழில்பயிற்யில் ஈடுபடுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டது. மிசி திட்டத்தில் பங்கு கொள்வதற்கு 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்வத்துடன் தங்களைப் பதிவு செய்து கொண்டதாக டிககம் லூர்ட்ஸ் திசைகளிடம் தெரிவித்தார்.

74 தொழிலாளர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தந்த ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு ஆகியோருக்கு அமைச்சர் மனித வள அமைச்சு சார்பில் டிக்காம் லூர்ட்ஸ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News