May 18, 2026
Thisaigal NewsYouTube
நிம்மதி பெருமூச்சு விடுவதாக சையிட் சாடிக் தெரிவித்தார்
தற்போதைய செய்திகள்

நிம்மதி பெருமூச்சு விடுவதாக சையிட் சாடிக் தெரிவித்தார்

Share:

புத்ராஜெயா, ஜூன்.25-

தனக்கு எதிரான நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டில் 7 ஆண்டு சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள மூடா கட்சியின் முன்னாள் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான், தம்மால் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட களங்கத்தைப் போக்குவதற்கு கடந்த 5 ஆண்டு காலமாக கடுமையாகப் போராடியாக மூவார் எம்.பி.யான சையிட் சாடிக் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தம்மை விடுதலை செய்தது மூலம் நீதி வென்றுள்ளதாக சையிட் சாடிக் குறிப்பிட்டார்.

தனது குடும்ப உறுப்பினர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த சையிட் சாடிக், இறைவனுக்கும், நீதிமன்றத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட முடியும் என்று தாம் திடமாக நம்பியிருந்ததாக முன்னாள் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரான சையிட் சாடிக் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை