Sep 30, 2026
Thisaigal NewsYouTube

இராணுவ அதிகாரி சம்பந்தப்பட்டட விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் முடிக்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இராணுவ அதிகாரி சம்பந்தப்பட்டட விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் முடிக்கப்படும்

புத்ராஜெயா, ஜனவரி.12-

இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு எதிரான நிதி முறைகேடு விசாரணை தொடர்பான அறிக்கை ஒரு வாரத்திற்குள் தயாராகி விடும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட இராணுவ உயர் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறும் பணி இன்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. இந்த விவகாரம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தயாராகிவிடும் என அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, அந்த அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 13 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இன்று மீண்டும் இரண்டாம் நாளாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாக அஸாம் பாக்கி விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →