Dec 2, 2025
Thisaigal NewsYouTube
42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மலேசியக் குழுவிற்கு பிரதமர் தலைமை தாங்குவார்
தற்போதைய செய்திகள்

42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மலேசியக் குழுவிற்கு பிரதமர் தலைமை தாங்குவார்

Share:

வரும் மே 10 தொடங்கி மே 11 வரை, இந்தோனேசியா, நூசா தெங்காரா தீமோர், லபுவான் பஜோவில் நடைபெறவிருக்கும் 42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு மலேசியாவைத் தலைமை தாங்குவார் என்று வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

ஆசியான் இளைஞர் பிரதிநிதிகள், ஆசியான் வர்த்தக ஆலோசனை மன்றம், 2025ஆம் ஆண்டுக்கு பிந்தைய ஆசியான் சமூக இலக்கு குறித்த உயர் அளவிலான ஊழியர் குழு, ஆகிய ஆசியான் தலைவர்களுக்குடனான கூட்டத்தில் பிரதமர் அன்வார் பங்கேற்பார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கிழக்கு ஆசியான், புரூணை, பிலிப்பைன்ஸ் வளர்ச்சி பகுதி உச்சநிலை மாநாட்டிற்கும், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து வளர்ச்சிக்கான உச்சநிலை மாநாட்டிற்கும் பிரதமர் தலைமையேற்கவிருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஆசியான் நாடுகளுக்கிடையே நெருக்கமான ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று அது குறிப்பிட்டது.

Related News