Jul 28, 2026
Thisaigal NewsYouTube
படகு கவிழ்ந்ததில் தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

படகு கவிழ்ந்ததில் தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்

Share:

பட்டவர்ட், பிப்ரவரி 23 -

மாக் மன்டின் னில் உள்ள மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் மரின் பெஸ் ஜெட்டியில் படகு பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நேற்று இரவு 10 மணியளவில் பட்டவர்ட் தீயணைப்பு நிலையத்தின் நீர் மீட்புக்குழுவின் உறுப்பினரான 42 வயதுடைய மொஹாமாட் இஸ்வான் இலியாஸ் பணியில் ஈடுபட்டிருந்த போது ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இரவு 10:20 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக தமது உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக மாநில தீயணைப்பு நடவடிக்கைகளின் உதவி இயக்குநர் கய்ரி சுலைமான் தெரிவித்தார்.

மேற்பார்வையாளர்களின் சோதனையின் போது பாதிக்கப்பட்டவர் படகில் இல்லாததையும் அவரின் அலறல் சத்தம் கேட்பதற்கு முன்பாக படகு கவிழ்ந்த நிலையில் இருப்பதையும் கண்டதாக செய்தியாளர்களிடம் விவரித்தார்.

இருந்தபோதிலும் தேடும் மற்றும் மீட்பு பணி மேலும் தொடர்ந்து வருவதாக மொஹாமாட் இஸ்வான் அறிவித்தார்.

Related News