Dec 4, 2025
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லோரி டோல் சாவடியில் காரை மோதித் தள்ளியது
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லோரி டோல் சாவடியில் காரை மோதித் தள்ளியது

Share:

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.14-

கார் ஒன்றை மோதித் தள்ளிய டிரெய்லர் லோரி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து டோல் சாவடி முகப்பிடத்தை மோதியது. இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் ஜோகூர் பாரு, கெலாங் பாத்தாவை நோக்கிச் செல்லும் ஜாலான் பெர்சியாரான் பெர்லிங்கில் பெர்லிங் டோல் சாவடியில் நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இச்சம்பவத்தை ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் உறுதிப்படுத்தினார்.

26 வயது உள்ளூர் ஆடவர் செலுத்திய அந்த வோல்வோ ரக டிரெய்லர் லோரி, பெர்லிங்கிலிருந்து கெலாங் பாத்தாவை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

அந்த லோரியின் காற்று அழுத்தம் பிரேக் செயலிழந்து விட்டதாக நம்பப்படுகிறது. இதில் 39 வயது நபர் செலுத்திய கார் சேதமுற்றது. இதில் டோல் சாவடியின் முகப்பிடத்தின் ஒரு பகுதி சேதமுற்றதாக அவர் மேலும் கூறினார்.

Related News