கெடா, அலோர்ஸ்டார், போக்கோக் சேனா அருகில் ஜாலான் பன்ச்சோ ரில் குளம் ஒன்றில் ஆடவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று காலை 11 மணியளவில் பொது மக்களிடமிருந்த கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கோத்தா ஸ்டார் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுபெரிதென்டன் ஷெட் பஸ்ரி ஷெட் அலி தெரிவித்தார்.
அந்த நபரிடம் எந்தவொரு அடையாள ஆவணமும் காணப்படவில்லை. சவப்பரிசோதனைக்காக சடலம் சுல்தானா பஹியா மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஷெட் பஸ்ரி குறிப்பிட்டார்.








