கெடா, லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சி. அரிச்சந்திரன், தாம் கொண்டுள்ள கொள்கை பிடிப்புக்கு ஏற்ப, தேர்தலுக்கு முன்னதாகவே மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கையில் தற்போது முழு வீச்சாக ஈடுபட்டு வருகிறார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மின் முன்னாள் அதிகாரியான அரிச்சந்திரன், கடந்த ஒன்பது நாட்களாக மேற்கொண்டு வரும் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தாமான் செலாசிஹ் வில் இடைநிலைப்பள்ளிக்கும், குடியிருப்புப் பகுதிக்கும் இடையில் எந்த நேரத்திலும் வேரோடு பெயர்த்துக்கொண்டு விழலாம் என்ற அபாயத்தில் இருந்து வந்த மரங்களை வெட்டி, அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.
இந்த மரங்களை அகற்றக் கோரி,இப்பகுதி மக்கள் நகராண்மைக்கழகத்திடம் பல மாதங்களாக முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இப்பகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் அரிச்சந்திரன், போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்திருப்பதை வட்டார மக்கள் வெகுவாக பாராட்டினர். அத்துடன் தங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர். இம்மரங்களை வெட்டி அகற்றுவதற்கான முழு செலவினத்தை சுயேட்சை வேட்பாளர் அரிச்சந்திரனே ஏற்றார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


