Sep 22, 2026
Thisaigal NewsYouTube
கணவனால் துன்புறுத்தப்படும் பெண்கள், அடைக்கலம் கோர முடியும்
தற்போதைய செய்திகள்

கணவனால் துன்புறுத்தப்படும் பெண்கள், அடைக்கலம் கோர முடியும்

Share:

கணவனால் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள், அந்தச் சித்ரவதையிலிருந்து மீளவும், தங்களைத் தற்காத்துக்கொள்ளவும், பிரத்தியேக அடைக்கலம் கோருவதற்கும் ஈ.பி.ஒ. என்ற அழைக்கப்படும் அவசர பாதுகாப்பு உத்தரவைப் பெறுவதற்கு உரிமைப்பெற்​றுள்ளனர் என்று மகளிர் நலன் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக அடைக்கல இல்லங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு, உரிய நிவாரணம் அளிப்பதற்கு இந்த ஈ.பி.ஒ. உத்தரவு வகை செய்யும் என்று அஸ்வா எனப்படும் மலேசிய மகளிர் நலன் காக்கும் அமைப்பின் தலைவர் வான் அஸாலீனா வான் அட்னான் தெரிவித்துள்ளார்.

அடைக்கலம் கோருவதற்கு இப்படி​யொரு உத்தரவு, நடைமுறையில் உள்ளது என்பதை பெரும்பானலான பெண்கள் அறிந்திருக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். கணவனின் சித்ரவதைக்கு ஆளாகும் பெண்கள், இந்த ஈ.பி.ஒ. உத்தரவை பெறுவது மூலம் அவர்கள் உடனடியாக ​மீட்கப்படுவர்.

அத்துடன் அவர்கள் 7 நாட்களுக்கு இந்தப் பிரத்தியேக இல்லத்தில் தங்க வைப்பர். அதுவரை அவர்களைக் கணவன்மார் நெருங்காமல் பாதுகாப்பு அளிக்கப்படும். அதன் பின்னர் அவர்களுக்கு உரிய வழிகாட்டல் மற்றும் தேவையான நல்லுரைகள் வழங்கப்படும் என்று வான் அஸாலீனா விவரித்தார். பாதிக்கப்பட்ட பெண்கள், நேரடி அழைப்புக்கு 15999 அல்லது புலனத்தில் 019-2615999 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று வான் அஸாலீனா விளக்கினார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்