Jul 31, 2026
Thisaigal NewsYouTube
11 வெளிநாட்டு ஊழியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

11 வெளிநாட்டு ஊழியர்கள் கைது

Share:

புக்கிட் மெர்தஜாம் , ஆகஸ்ட் 21-

பினாங்கு, செபரங் ஜெயா-இல் உள்ள வணிக தலத்தில், பினாங்கு குடிநுழைவுத் துறை மேற்கொண்ட Ops Selera சோதனையில் 11 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 முதல் 40 வயதுக்குட்பட்ட அந்த 11 தொழிலாளர்கள் முறையான ஆவணம் வைத்திருக்காது, அனுமதிக்கப்படாத துறையில் வேலை செய்தது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட வணிக தலத்தின் இருந்த 27 உணவு கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதை பினாங்கு குடிநுழைவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அதோடு, அது குறித்து வணிக உரிமையாளர்கள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News