Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாணவி பாலியல் பலாத்காரம், யாரையும் கல்வி அமைச்சு தற்காக்காது
தற்போதைய செய்திகள்

மாணவி பாலியல் பலாத்காரம், யாரையும் கல்வி அமைச்சு தற்காக்காது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.11-

மலாக்காவில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளியில் மூன்றாம் படிவ மாணவி ஒருவர், வகுப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எந்தவொரு மாணவரையும் கல்வி அமைச்சு தற்காக்காது என்று அதன் அமைச்சர் ஃபட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் மேற்கொள்கின்ற விசாணைக்கு எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு நல்குமாறு பள்ளி நிர்வாகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாநில கல்வி இலாகாவிற்கு அமைச்சர் ஃபாட்லீனா உத்தரவிட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்விக்கழகங்களில் இது போன்ற செயல்களில் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்பதையும் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News