ஒரு நாட்டின் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல், அந்த நாட்டின் தேசிய உற்பத்தி வளர்ச்சி விகித அதிகரிப்புக்கு ஒரு தடையாக இருக்காது என்றும் அதற்கு சிறந்த உதாரணம் அண்டை நாடான தாய்லாந்து என்றும் உவமைக்காட்டி பேசியிருக்கும் பாஸ் கட்சியின் பேரா மாநில தலைவர் ரஸ்மான் சகாரியா வை முன்னாள் துணை அமைச்சர் ஓங் கியான் மிங் சாடினார்.
மலேசியாவின் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை தாய்லாந்துடன் ஒப்பிட்டு பேசும் அந்த பாஸ் கட்சித் தலைவரின் சிந்தனையாற்றல் குறித்து முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னாள் துணை அமைச்சரான ஓங் கியான் மிங் கேள்வி எழுப்பினார். காரணம், மலேசியா, பொதுத் தேர்தல் மூலமாக அமைக்கப்படும் ஓர் அரசாங்கத்தை கொண்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியின் இடையூற்றினால் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தாய்லாந்தில் அத்தகைய ஒரு நெருக்கடி நிலை உள்ளதா ? என்று ஓங் கியான் மிங் கேள்வி எழுப்பினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


