Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலாக்காவில் இன்று 19-வது AMMTC கூட்டத்தைத் துவக்கி வைக்கிறார் அன்வார்!
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் இன்று 19-வது AMMTC கூட்டத்தைத் துவக்கி வைக்கிறார் அன்வார்!

Share:

மலாக்கா, செப்டம்பர்.09-

எல்லைத் தாண்டிய குற்றங்களைக் கட்டுப்படுத்தும், அமைச்சர்களின் பேச்சு வார்த்தைக் கூட்டமான, 19-வது AMMTC கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

இன்று செவ்வாய்க்கிழமை, மலாக்காவில் துவங்கவுள்ள இக்கூட்டம், நாடு கடந்த குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தேவையான வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறவிருக்கிறது.

AMMTC தலைவர்கள், ஆசியான் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு, மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News