பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை ஞாயிற்றுக்கிழமை, தேசிய தினத்துக்கு முந்தைய தின உரையில், மலேசியர்களின் அன்றாட வாழ்க்கையையும் கவலைகளையும் நேரடியாகத் தொடும் பல முக்கிய நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளார்.
பிற்பகல் 3 மணியளவில் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் அவர் உரையாற்றுகிறார். இந்த உரை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
கடந்த தலைமுறையினர் நாட்டுக்காக செய்த தியாகங்களை நினைவுகூரும் அதேவேளை, தற்போதைய தலைமுறையினரின் பொறுப்புகளையும் மலேசியர்கள் சிந்திக்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.
மேலும், நாட்டின் அமைதியையும் வளத்தையும் பாதுகாக்க இன மற்றும் மத வெறுப்பைத் தூண்டும் செயல்களை மலேசியர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சுதந்திரத்தின் அர்த்தத்தை அடுத்த தலைமுறைக்காக நாம் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்” என்று அன்வார் குறிப்பிட்டார்.








