தேசபக்திப் பாடலான ‘கீத்தா வர்கா மலேசியா’, இசை மற்றும் படைப்புக் கலை மூலம் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மலேசியர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் புதிய முயற்சியாக அமைந்துள்ளது.
தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான பினாஸ் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அஸ்மிர் சைஃபுடின் முஹ்தாலிப் கூறுகையில், தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு இப்பாடல் பொருத்தமானதாக உள்ளது என்றார்.

கலாசார, மொழி வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்க படைப்புத் துறையால் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்றை வளர்க்கும் இதுபோன்ற முயற்சிகளை பினாஸ் ஆதரிப்பதாகவும், இதில் படைப்புகளைத் தேர்வு செய்வதில் பினாஸ் ஈடுபடவில்லை என்றும் அஸ்மிர் தெரிவித்தார்.








