Aug 29, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் 22-ல் இருந்து 8 ஆக குறைப்பு – அன்வார் பதிலடி
தற்போதைய செய்திகள்

சிறப்பு லாட்டரி குலுக்கல்கள் 22-ல் இருந்து 8 ஆக குறைப்பு – அன்வார் பதிலடி

Share:

சிறப்பு லாட்டரி குலுக்கல்களை ஆண்டுக்கு 22-ல் இருந்து 8 ஆகக் குறைத்த அரசாங்கத்தின் முடிவை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்துப் பேசியுள்ளார்.

தாம் சூதாட்டத்தை ஆதரிப்பவர் அல்ல என்றும், பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னரே சிறப்பு குலுக்கல்களின் எண்ணிக்கையை 22-ல் இருந்து 8 ஆகக் குறைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய அரசாங்கங்களின் காலத்தில்தான் ஆண்டுக்கு 22 சிறப்பு குலுக்கல்கள் அனுமதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அன்வார், “நான் ஆட்சிக்கு வந்த பிறகு அதை 8 ஆகக் குறைத்தேன். என்னை ஏன் குறை சொல்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

சூதாட்டத்தைத் தமது அரசாங்கம் ஆதரிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

அதேவேளை, அரசாங்கத்தின் கடமை பொதுநிதி கசிவுகளைத் தடுத்து, அந்த வளங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதாகும் என்றார்.

தவறு அல்லது நிதி முறைகேடு தொடர்பாக புகார்கள் எழுந்தால், அமலாக்கத் துறைகள் உரிய முறையில் விசாரணை நடத்தி, அதற்கான ஆதாரங்களைத் திரட்ட வேண்டும் என்று அன்வார் கூறினார்.

விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர்கள் மீது குற்றஞ்சாட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர், ஒருவர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கும் நீதிபதிக்கும் உரியது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

அரசாங்கம் அல்லது அமலாக்கத் துறைகள் நீதிமன்றத்தின் பணியை தாங்களே மேற்கொள்ளக் கூடாது; ஆதாரங்களைத் திரட்டி வழக்கை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதே அவர்களின் பொறுப்பு, இறுதித் தீர்ப்பை நீதிபதியிடம் விட்டுவிட வேண்டும் என்பதே அன்வாரின் கருத்தாகும்.

Related News