Sep 7, 2026
Thisaigal NewsYouTube
புகைமூட்டத்துக்கு மத்தியிலும் தேசிய தின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் – ஃபஹ்மி
தற்போதைய செய்திகள்

புகைமூட்டத்துக்கு மத்தியிலும் தேசிய தின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் – ஃபஹ்மி

Share:

வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திங்கட்கிழமை புத்ராஜெயா டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெறவுள்ள 2026 தேசிய தின அணிவகுப்பு, வானிலை சாதகமாக இருந்தால் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் புகைமூட்டம் காரணமாக, சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் நேற்று சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

வானிலை நிலவரத்தைப் பொறுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், மேக விதைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என்றும் ஃபஹ்மி தெரிவித்தார்.

ஆஸ்துமா அல்லது சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ளவர்கள், சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படி முகக்கவசம் அணியுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அணிவகுப்பில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு 80,000-க்கும் அதிகமானோர் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அன்றைய தினம் வானிலை நிலைமை மோசமாக இருந்தால், நிகழ்ச்சி நிறுத்தப்படும் என்றும் ஃபஹ்மி தெளிவுபடுத்தினார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து