கோலாலம்பூர், நவம்பர்.05-
பல்வேறு அமைச்சுகளை உள்ளடக்கிய ஊழல் வழக்குகள் தொடர்பாக 80-க்கும் மேற்பட்ட விசாரணை ஆவணங்களை எஸ்பிஆர்எம் திறந்துள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2025 செப்டம்பர் 26-ஆம் தேதி வரையில், மொத்தம் 87 விசாரணை ஆவணங்கள், எஸ்பிஆர்எம் மூலம் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அவற்றில், மொத்தம், 28 அமைச்சுகளில், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சில் அதிகபட்சமாக 14 வழக்குகளும், உள்துறை அமைச்சில் 11 வழக்குகளும், கல்வி அமைச்சு மற்றும் நிதி அமைச்சில் தலா 8 வழக்குகளும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலு திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசோல் வாஹிட், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை தொடர்புடைய ஊழல் வழக்குகளின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அஸாலினா ஒத்மான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை, டிஜிட்டல், பொது பணித்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட 8 துறைகளில் ஊழல் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








