Mar 16, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர்கள் அந்தோணி லோக், ஸ்டீவன் சிம்மிற்கு தேவஸ்தானம் நன்றி
தற்போதைய செய்திகள்

அமைச்சர்கள் அந்தோணி லோக், ஸ்டீவன் சிம்மிற்கு தேவஸ்தானம் நன்றி

Share:

வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் பத்துமலை தைப்பூசவிழாவை முன்னிட்டு, பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரியும் பக்தர்களுக்கு இரண்டு தினங்களுக்கு இலவச ரயில் போக்குவரத்து சேவைக்கு ஏற்பாடு செய்து இருக்கும் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke - க்கிற்கும், பக்தர்கள் தங்குவதற்கும், இளைப்பாறுவதற்கும் பெரிய கூடாரங்களை அமைத்து கொடுத்துள்ள மனித வள அமைச்சர் Steven Sim Chee Keong- கிற்கும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது.

கடந்த வாரம் சனிக்கிழமை அமைச்சர் அந்தோணி லோக்கும், நேற்று வெள்ளிக்கிழமை மனித வள அமைச்சர் Steven Sim Chee Keong- கும் பத்துமலைத் திருத்தலத்திற்கு நேரடியாக வருகை தந்து, பத்துமலை தைப்பூச விழா மேலும் சிறப்பதற்கு தத்தம் அமைச்சின் சார்பில் வழங்கக்கூடிய பங்களிப்பை அறிவித்து இருப்பதை நன்றிபெருக்குடன் தேவஸ்தானம் வரவேற்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்

இரு அமைச்சுக்கள் வழங்கியுள்ள இந்த சலுகைகளையும், வசதிகளையும் தைப்பூச விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

அமைச்சர்கள் அந்தோணி லோக், ஸ்டீவன் சிம்மிற்கு தேவஸ்தானம் ந... | Thisaigal News