பஹாங், காராக் புகிட் திங்கி நெடுஞ்சாலையின், 43 ஆவது கிலோமீட்டரில், மணல் ஏற்றப்பட்ட த்ரெலர் லோரியில் சிக்கி, சுமார் 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் 33 வயதுடைய, மொஹம்மாட் ஹஸ்ருல் அப்துல் ஹாலிம் என்ற அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் அதிகாரி சுல்ஃபட்லி ஸகாரியா தெரிவித்தார்.
இன்று அதிகாலை 3.45 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, 3 தீயணைப்பு வண்டிகளுடன் அவ்விடத்திற்கு விரைந்த 15 வீரர்கள், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அந்நபரை மீட்கும் பணியில் முழு வீச்சில் ஈடுப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சுல்ஃபட்லி ஸகாரியா இதனை தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


