May 24, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் அரசு பணியாளர் குற்றங்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் அரசு பணியாளர் குற்றங்சாட்டப்பட்டார்

Share:

திரெங்கானு, ஆகஸ்ட் 25-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலி ஆவணங்களை பயன்படுத்தி, ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 867 வெள்ளியை முறைகேடு புரிந்ததாக முன்னாள் அரசாங்கப் பணியாளர் ஒருவர், கோலத்திரெங்கானு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

58 வயது ஜாஃப்ரி வஹாப் என்ற அந்த முன்னாள் பணியாளருக்கு எதிராக மொத்தம் 13 மோசடி குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

எனினும் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அந்த முன்னாள் அரசு பணியாளர் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 13 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related News