சிப்பாங், ஆகஸ்ட்.12-
மலேசியாவைச் சுற்றிப் பார்க்க வந்திருப்பதாகக் கூறிய 40 வங்காளதேசப் பிரஜைகள் சுற்றுலா நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்டவர்களின் மலேசிய வருகையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு தடுக்கப்பட்டதுடன், 24 மணி நேரத்திலேயே தாயகத்திற்குத் திரும்பும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மலேசிய எல்லை கண்காணிப்பு, கட்டுப்பாடு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை ஒரு மணியிலிருந்து காலை 6 மணி வரை சோதனை செய்யப்பட்ட 134 அந்நியப் பிரஜைகளில் இந்த 40 பேரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








