ஆறு தளவாட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இன்று தீயிக்கு இரையானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக் குழுவின் இயக்குனர் வான் எம்டி ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
கம்போங் பாரு சுங்கை பூலோ அருகில் அமைந்துள்ள அந்த 6 தளவாடப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் , இன்று மாலை மணி 4.30 மணியளவில் தீ ஏற்பட்டு தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் 12 நிமிடத்தில் அந்த தொழிற்சாலையை அடைந்துள்ளனர்.
தற்பொழுது அந்த தொழிற்சாலையில் தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால், உயிர் சேதம் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.








