மடானி மலேசியா ராஹ்மாஹ் திட்டத்தின் கீழ் பொருள் விற்பனையின் வாயிலாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றவர்களும் பி40 தரப்பைச் சேர்ந்த குடும்பங்களும் இன்று வரை பயன் அடைந்து வருவதாக கூலிம் சட்டமன்றத்திற்கு போட்டியிடும் மக்கள் நீதி கட்சியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அவாங் தே லியாங் ஓங் தெரிவித்துள்ளார்.
சமையல் பொருட்கள் உட்பட சாமானிய மக்களின் அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதில் மடானி மலேசியாவின் ராஹ்மாஹ் திட்டம் கருணை சார்ந்த பங்களிப்பை வழங்கி வருவதாக அவாங் தே லியாங் ஓங் கூறினார்.
கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக குறைந்த விலையில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள இந்த ராஹ்மாஹ் பொருள் விற்பனை திட்டம், தற்போது கூலிம் வட்டாரத்தில் தாமான் கெனாரி மற்றும் தாமான் ஜாத்தி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவையின் வாயிலாக ஏறக்குறை 700 க்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெற்று வருவதாக அவாங் தே லியாங் ஓங் குறிப்பிட்டார்.
உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் இந்த ராஹ்மாஹ் ராஹ்மாஹ் திட்டம் மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் பக்காத்தான் ஹராப்பானின் மக்கள் நலம் சார்ந்த வியூகமாகும் என்று அவாங் தே லியாங் ஓங் புகழாரம் சூட்டினார்.








